Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

2022 வரை அவுஸ்திரேலியாவிற்குள் சுற்றுலா பயணிகளிற்கு அனுமதியில்லை!

அவுஸ்திரேலியா 2022ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுப்பயணிகளை நாட்டிற்குள் வரவேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இன்று தெரிவித்தார்.

முதல் தடுப்பூசி போடப்பட்ட அmவுஸ்திரேலியர்களை வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிப்பது மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களை வீடு திரும்ப அனுமதிப்பது முதல் படி என்று மொரிசன் கூறினார்.

அவுஸ்திரேலிய மக்கள் தொகையில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எல்லை தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கும் என்று மொரிசன் கூறினார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

தடுப்பூசி போட்டுக்கொண்ட குடிமக்களும் நிரந்தரவாசிகளும் அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளுக்குச் சென்று வர, அவுஸ்திரேலியா அண்மையில் அனுமதி கொடுத்தது.

வெளிநாட்டு மாணவர்களின் வருகை இல்லாமல் அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

Leave a Comment