24.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

தாடியை அகற்றக்கூடாது: முடிதிருத்துபவர்களிற்கு தலிபான்கள் கண்டிப்பான கட்டளை!

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் சிகையலங்கார நிபுணர்களிற்கு தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். தாடியை முழுமையாக மழிக்கவோ அல்லது கத்தரித்து அலங்காரம் செய்யவோ தடை விதித்க்கப்பட்டுள்ளது.

விதிமுறையை மீறும் எவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று தலிபான் மத காவல்துறை கூறுகிறது.

தலைநகர் காபூலிலிலும் இதேபோன்ற உத்தரவு தமக்கு வழங்கப்பட்டதாக, சில முடிதிருத்தும் நபர்கள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, தலிபான்கள் தமது எதிரிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். சனிக்கிழமை, நான்கு கடத்தல்காரர்களை சுட்டுக் கொன்றதுடன், அவர்களின் உடல்கள் ஹெராட் மாகாணத்தின் தெருக்களில் தொங்கவிட்டனர்.

தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள சலூன்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், முடி திருத்துபவர்கள், தாடி தொடர்பான ஷரியா சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தாலிபான் அதிகாரிகள் எச்சரித்தனர்.

“போராளிகள் தொடர்ந்து வந்து தாடியை வெட்டுவதை நிறுத்துமாறு எங்களுக்கு கட்டளையிடுகிறார்கள். அதை மீறுபவர்களை அடையாளம் காண, தமது ஆட்களை வாடிக்கையாளர்களாக எம்மிடம் அனுப்பலாம் என்று என்னிடம் கூறினார்கள்” என்று காபூலில் ஒரு முடிதிருத்தும் நபர் கூறினார்.

நகரின் மிகப்பெரிய சிகையலங்கார நிலையத்தை நடத்தும் மற்றொருவர், அரசாங்க அதிகாரி என்று கூறி ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறினார். அவர்கள் “அமெரிக்க பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள்” மற்றும் யாருடைய தாடியையும் ஷேவ் செய்யவோ அல்லது வெட்டவோ கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

1996 முதல் 2001 வரை தலிபான்களின் முதல் ஆட்சியின் போது, ​​கடுமையான இஸ்லாமியர்கள் ஆடம்பர சிகை அலங்காரங்களை தடை செய்தனர் மற்றும் ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் 2001 இன் பின், சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட தோற்றம் பிரபலமானது. பல ஆப்கானிஸ்தான் ஆண்கள் நாகரீகமான வெட்டுக்களுக்காக சிகையலங்கார நிலையங்களுக்குச் சென்றனர்.

தற்போதைய தலிபான்களின் உத்தரவால், சிகையலங்கார தொழிலில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிலை தொடர முடியாமலுள்ளதாக பலர் கவலை தெரிவித்தனர்.

“வாடிக்கையாளர்கள் தங்கள் தாடியை மழிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தெருக்களில் தலிபான் போராளிகளால் குறிவைக்கப்படுவதை விரும்பவில்லை. அவர்கள் தலிபான்களை போல தோற்றமளிக்க விரும்புகிறார்கள்.கட்டணங்களை குறைத்த போதிலும், சிகையலங்கார நிலையங்களிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது,” என்று இன்னொருவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

Leave a Comment