முல்லைத்தீவில் பிரத்தியேக இடத்தில் தியாக தீபம் திலீபனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அ.ஜே. பீற்றர் இளஞ்செழியன் இன்றைய தினம் (26) காலை 11 மணியளவில்
மலர் தூபி பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இலங்கையில் இந்திய இராணுவ தலையீட்டின் போது, 5 அம்ச உண்ணாவிரத கோரிக்கையை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நீராகாரமும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபன், செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.
நேற்று (25) பீற்றர் இளஞ்செழியனுக்கு அவரது தந்தையாரின் பெயரில் முல்லைத்தீவு நீதி மன்றினால் வழங்க பட்ட கட்டளையினை வழங்க வந்த பொலிசாருக்கு இறந்த என் தந்தைக்கு உண்ணபிலவில் அமைந்துள்ள கத்தோலிக்க சேமக்காலையில் சென்று வழங்குமாறு திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1