கும்பாபிசேகம் நடத்திய ஆலயம், 30 வீடுகள் தனிமைப்படுத்தல்: 13 பேருக்கு தொற்று!

Date:

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற கும்பாவிசேகம் நிகழ்வில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையால் ஆலயம் மற்றும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாவிசேகம் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. தற்போதைய கோவிட் பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஆலய நிர்வாகத்தினர், உபயகாரர் என 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

ஆனால், குறித்த ஆலயத்தில் 20 பேருக்கு மேல் நிற்பதாகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் ஆலய குருக்கள் உட்பட 6 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதுடன், ஆலயத்திற்கு வந்து சென்றோர் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் ஆகியோரிடமும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் 7 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆலய கும்பாவிசேக நிகழ்வுடன் தொடர்புபட்ட 13 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்