வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: 5 பேர் மரணம்

Date:

வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 5 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (20.09) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 42 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (19) 5 பேர் மரணமடைந்துள்ளனர். 4ம் கட்டை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 86), புகையிரத நிலைய வீதியில் ஆண் ஒருவரும் (வயது 63), புதுக்குளம் பகுதியில் பெண் ஒருவரும் (வயது 61), கோயில்புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 81), தாண்டிகுளம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 73) என 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்