அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மூலம் பொதுமக்கள் பிரதிநிதிகளை மௌனமாக்க முயற்சித்து, தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என்று ஐக்கிய மக்கள சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரா சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி., எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் குடி உரிமைகளை பறிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.
முன்னாள் அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் அவர்கள் ஊழலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டனர், அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என்று அவர் கூறினார்.
அந்த நேரத்தில் குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும், இன்று ஒரு ஆணைக்குழு மூலம் வழக்குகளை தள்ளுபடி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது, இது ஜனநாயகம் உள்ளிட்ட நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.