தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்குவது கொரோனா வைரஸ் வேகமாகப் பரவ வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறை மீண்டும் செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டார்.
மற்ற அனைத்து கடைகளையும் மூட வேண்டிய கட்டத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்க எந்த அடிப்படையும் இல்லை என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சு அத்தகைய நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, எனவே இந்த விவகாரம் குறித்து உரிய அதிகாரிகள் உரிய முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.



