வவுனியாவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த காப்பகத்தில் கோவிட் தொற்று காரணமாக மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிட் தொற்றால் மரணமடைந்த நிலையில், இன்றும் (17) ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அத்துடன், குறித்த காப்பகத்தில் இருப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 50 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



