25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil
மலையகம்

மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

பாடசாலையின் 16 வயது  மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஓபநாயக்க பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவரின் தந்தை ஓபநாயக்க பொலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 03 அன்று பாடசாலை நேரத்திற்குப் பிறகு தனது மகனை, அதிபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மாணவனின் தந்தை கூறியிருந்தார்.

மாணவர் பல சந்தர்ப்பங்களில் மனஉளைச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மாணவரின் பெற்றோர் இதன் பின்னணியை ஆராய்ந்ததில், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடயில் வசிக்கும் சந்தேகநபர் நேற்று பலாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து

east tamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

தந்தையின் முன்பாக விபத்தில் பலியான மாணவி

Pagetamil

Leave a Comment