Pagetamil
இலங்கை

ஊரடங்கு நீங்குமா?… நீடிக்குமா?: இன்று முடிவு!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்த முடிவு இன்று அறிவிக்கப்படும்.

கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடுகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு மீண்டும் திறக்கப்பட்டால், அன்றாட நடவடிக்கைகளில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்த ஒரு வழிகாட்டுதலை  சுகாதார அதிகாரிகள் இன்று வெளியிடுவார்கள்.

செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகு தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் போது விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கையை தொகுக்க கோவிட் -19 பணிக்குழுவின் முந்தைய கூட்டத்தில் ஜனாதிபதி உத்தரவுகளை பிறப்பித்தார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதாரத் துறையின் பரிந்துரைகள் குறித்து இந்தக் குழு விவாதிக்கும்.

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை, பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

east tamil

Leave a Comment