நியூஸிலாந்துக் கடற்பகுதிக்குள் அணுவாற்றல் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டன் கூறியுள்ளார்.
அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தடையைத் தளர்த்தப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பசிபிக் வட்டாரத்தில் நடத்தப்பட்ட பிரஞ்சு அணுவாயுதச் சோதனையைத் தொடர்ந்து, 1985 இல் அந்தத் தடை அமுல்ப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு, நியூஸிலாந்துத் துறைமுகங்களில் அமெரிக்கக் கடற்படைப் போர்க்கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் தடை நீடிக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியோடு, அணுவாற்றல் நீர்மூழ்கிப் கப்பல் அணியை மேம்படுத்தும் திட்டம் பற்றி, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தமக்கு விளக்கியதாக ஆர்டன் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம், தற்காப்பு ஆகியவற்றில் அந்த ஒப்பந்தம், முதன்மைக் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.