நேற்று 2,842 பேருக்கு தொற்று!

Date:

நேற்று (10) நாட்டில் 2,842 நோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 480,478 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,832 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த 10 பேருக்கும் நேற்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் 59,855 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 1,512 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 409,628 ஆக உயர்ந்துள்ளது.

கொரொனா தொற்று சந்தேகத்தில் 3,443 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்