வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் உதவியுடன் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது

Date:

வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் உதவியுடன் ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு இன்று (10) ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

கோவிட் பரம்பல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் முதியவர்கள் தமது ஓய்வூதியத்தை வங்கிகளுக்கு சென்று பெற முடியாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான போக்குவரத்து ஓழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தின் ஏற்பாட்டில் பேரூந்துகள் மற்றும் பிக்கப் வாகனங்களில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓய்வூதியம் பெறுவர்கள் வவுனியா நகரப்பகுதியில் உள்ள அரச வங்கிகளுக்கு வருகை தந்து தமது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஓய்வூதியப் பணத்தினைப் பெற்றுச் சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் சீன சைபர் மோசடிக் கும்பல்களை விசாரிக்க அமெரிக்க FBI குழு வருகை!

இலங்கையில் தங்கியிருந்து சீனப் பிரஜைகளால் நடத்தப்படும் சைபர் மோசடி மையங்கள் தொடர்பான...

கொழும்பில் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு! AQI 178 ஆக உயர்வு

கொழும்பில் நேற்று (நவம்பர் 17) காலை காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்