பருத்தித்துறையில் கொரோனாவினால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் மல்லாவியில்; விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Date:

யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் கடந்த 02.09.21 அன்று உயிரிழந்த 81 அகவையுடை வயோதிப பெண் ஒருவர்,உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுருந்தது.

இவ் நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதாரமருத்துவமனை கொண்டுவரப்பட்டுள்ளதுடன் 09.09.21 அன்று இரவு பிரேத அறையில் கொரோனா விதிமுறைப்படி அடைக்கப்பட்டு இருந்த சடலம் உடைக்கப்பட்டு பார்வையிடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் மல்லாவியினை நிரந்தர முகவரியாகவும் அல்வாய் வடக்கு மத்தி பருத்தித்துறையினை தற்காலிக முகவரியாகவும் கொண்ட வயோதிப பெண் உயிரிழந்த நிலையில் அவரின் பிள்ளைகள் மல்லாவியில் வசித்து வருகின்றார்கள்.

பருத்தித்துறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பின்னர் மல்லாவி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவ்வாறு கொண்டுவந்த சடலத்தை சுற்றப்பட்ட பொலீத்தின் உடைக்கப்பட்டு சடலம் பார்வையிடப்பட்டுள்ளமை மல்லாவியில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோன சடலம் மல்லாவி வந்தமை, சடலம் சுற்றப்பட்ட பொலீத்தீன் உடைக்கப்பட்டு சடலத்தினை பார்வையிட்டமை போன்ற சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் வழக்கு பதிவும் செய்துள்ளார்கள்.

சடலத்தினை மல்லாவி பிராந்திய சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து தகனம் செய்யுமாறும், யாழிலிருந்து சடலம் எவ்வாறு மல்லாவிக்கு கொண்டுவரப்பட்டது என்றும், சடலம் உறவினர்களால் திறக்கப்பட்டமை தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு உரியவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் 10 சதவீதப் பிறப்புகள் குறைமாதப் பிறப்புகள் – நீண்டகால மருத்துவக் கண்காணிப்பு அவசியம்!

இலங்கையில் இடம்பெறும் மொத்தப் பிறப்புகளில் சுமார் 10 சதவீதமானவை குறைமாதப் பிறப்புகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்