நல்லூரில் தீப்பந்த போராட்டம்!

Date:

மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்​கத்​தா​வின் பிரி​கேட்...

‘விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு’ – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்