மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

Date:

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.

கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்னா உள்ளிட்ட என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் மோடி மேடையில் இருந்த 98 வயதான மூத்த பாஜக தொண்டர் மகான்லால் சர்க்காரிடம் ஆசி பெற்றார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பவானிப்பூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை 15,115 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வை​யில் பாஜக-வுக்கு 3 எம்எல்​ஏக்​கள் மட்​டுமே இருந்​தனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டப்​பேர​வைத் தேர்​தலில் 77 எம்எல்ஏக்​களாக உயர்ந்​தது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்​தலில் 207 பாஜக எம்​எல்​ஏக்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு உள்​ளனர். 9 மாவட்​டங்​களில் திரிண​மூல் காங்​கிரஸுக்கு ஒரு தொகு​தி​கூட கிடைக்​க​வில்​லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு’ – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...

மீண்டும் இணைய குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் சிக்கினர்

சைபர் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வெலிசர இடைநிலை முகாமில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்