24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
சினிமா

சூர்யா நிறுவனம் பெயரில் ஏற்பட்ட மோசடி குறித்து பேசிய சூர்யா!

தமிழ் சினிமாவில முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் 2டி என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். தற்போது 2டி நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, எங்கள் லோகோவையும் பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் சில மோசடியான நபர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இருப்பதை அறிந்தோம். இந்த ஏமாற்று வேலை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்.

2டி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆடிஷன் நடத்துவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை இது போன்ற ஆடிஷன் நடத்துவதில்லை. மேலும் ஆடிஷன்களுக்கு நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை. எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

எனவே இத்தகைய போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களுடைய ரகசிய தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்குமாறும் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

Leave a Comment