உலகளாவிய பணப்புழக்கத்தை அதிகரிக்க 650 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சிறப்பு பொது ஒதுக்கீட்டு வரைபிற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்ட வரைபில் இலங்கையும் உள்ளடங்குகிறது.
நேற்று முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஒதுக்கீட்டில் சுமார் 275 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்த வருமானம் கொண்ட, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் இலங்கை போன்ற வளரும் நாடுகளிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவிக்கையில், இது சர்வதேச நாணய நிதியத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பொது வரைபு ஒதுக்கீடு, முன்னெப்போதும் இல்லாத உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சி என்றார்.
பொது ஒதுக்கீட்டு திட்டத்தி் 190 உறுப்பு நாடுகளிற்கு நிதி வழங்கப்படும். அவர்கள் நிதியில் இருக்கும் ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப சிறப்பு வரைதல் உரிமைகள் துறையில் பங்கேற்கிறார்கள்.
அதன்படி, இந்த வசதி மூலம் இலங்கை கிட்டத்தட்ட 787.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற தகுதி பெறும்.