தடுப்பூசி அட்டையுடன் நடமாட அனுமதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

Date:

கட்டாயமாக தடுப்பூசிகள் செலுத்துவது மற்றும் தடுப்பூசி போடப்படாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் விதிமுறைகளுக்கு எதிராக இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப் போவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடுவது குறித்து தனிப்பட்ட முடிவை எடுப்பதற்கான மக்களின் உரிமையையும்,  COVID-19 க்கு எதிராக எடுக்கும் பாதுகாத்தல் நடவடிக்கையை தெரிவு செய்யும் உரிமையுள்ளதென்பதையும் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எந்தவித நோய்களும் இல்லாத மற்றும் எந்த மருந்துகளையும் உட்கொள்ளாத நபர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போடவோ அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் சட்டங்களை இயற்றவோ முடியாது. அதை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்வதன் மூலம் செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதா அல்லது வேறு சிகிச்சை முறையை பெறுவதாக என்பதை மக்கள் தீர்மானிக்கும் உரிமையுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்