பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் கும்பல் சிக்கியது!

Date:

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின்பேரில் தேடப்பட்டுவந்த பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் இரண்டுபேர் முச்சக்கரவண்டியுடன் இன்று (20) கல்குடா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்குடா – பிறைந்துறைச்சேனைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இவர்களிடமிருந்து ஹெரொயின் போதைப்பொருட் பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.

கல்குடா பொலிஸ் பிரிவின் சில பகுதிகளில் அண்மைக்காலமாக ஒரு குழுவினர் மாணவப் பருவத்தினரை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டுவந்த நிலையில் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்ற ஓர் அமைப்பாக செயற்பட்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாரசிங்க, மற்றும் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம். ஜயசுந்தர ஆகியோரின் வழிகாட்டலில் கல்குடா பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

-ருத்ரா-

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்