சிம்புவால் தூக்கம் தொலைத்த இளம்பெண்கள்!

Date:

சிம்பு செய்த காரியத்தால் ரசிகைகள் பலர் தூக்கம் இழந்துவிட்டனர். ரசிகர்களும் கூடத் தான். அவர் ஒன்னும் தவறாக எதுவும் செய்யவில்லை, தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு பலரின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். சிம்பு குண்டாகிட்டார், அங்கிள் மாதிரி இருக்கிறார், கெரியர் காலி என்று விமர்சனம் எழுந்த நிலையில் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார்.

அவர் ஒல்லியானதை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விட, சிம்புவை கிண்டல் செய்தவர்களோ வாயடைத்து போனார்கள்.
இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக தன் உடல் எடையை மேலும் 15 கிலோ குறைத்து சின்னப் பையன் மாதிரி ஆகிவிட்டார் சிம்பு. எல்லாம் கிராபிக்ஸ் மக்களே என்று சிலர் நம்பாமல் விமர்சிக்க, சட்டை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டார் சிம்பு. இந்நிலையில் நேற்று மாலை மனிதன் சும்மா இல்லாமல் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் அசந்தே போனார்கள். சிம்புவை பார்த்து தூக்கம் போய்விட்டதாக ரசிகைகள் பலர் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்துள்ளனர்.
தலைவன் நாளுக்கு நாள் வேற மாறி ஆகிட்டே இருக்கான் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் குஷியில் இருக்கிறார்கள். சிம்பு வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.
சிம்புவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட இந்த புகைப்படத்தை பார்த்து வியக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் சீன சைபர் மோசடிக் கும்பல்களை விசாரிக்க அமெரிக்க FBI குழு வருகை!

இலங்கையில் தங்கியிருந்து சீனப் பிரஜைகளால் நடத்தப்படும் சைபர் மோசடி மையங்கள் தொடர்பான...

கொழும்பில் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு! AQI 178 ஆக உயர்வு

கொழும்பில் நேற்று (நவம்பர் 17) காலை காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்