Pagetamil
மருத்துவம்

சினைப்பையில் நீர் கட்டியா: இதோ காரணங்களும் தீர்வுகளும்

சினைப்பை நீர்க்கட்டி செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை  

சினைப்பை நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையின் இருபுறம் உள்ள சினைப்பையில் நிறைய கருமுட்டைகள் இருக்கும். இந்த சினைப்பையில் கருமுட்டைகள் மாதந்தோறும் முதிர்ச்சி அடையும். இந்த சினைப்பை கருமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் போகும் பொழுது சின்ன சின்ன நீர்க்கட்டிகள் உருவாகும் பின்பு நாளடைவில் பெரிய நீர்க்கட்டிகளாக வளர்ச்சியடைகின்றன.

  சினைப்பை நீர்க்கட்டி

  இதனால் பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு வராமல் போவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த நிலையில் உள்ள சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையை ஆங்கில மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ். அல்லது பி.சி.ஓ.டி. என்று அழைக்கிறார்கள். இந்த பி.சி.ஓ.எஸ். நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்பவர்கள் 40% மேலும் கிட்டதட்ட 60% பேர் இந்த அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் உள்ளனர்.

  பி.சி.ஓ.எஸ். பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுபடுத்தி விட்டால் சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கலாம். நோய் ஆட்டுவிக்கிறது.

  மாதவிடாய் கோளாறுகள்

  ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி,

  அதிகரித்த மாதவிடாய் ரத்தப்போக்கு அல்லது மிகவும் குறைவான மாதவிடாய் ரத்தப்போக்கு.

  மாதவிடாய் ஏற்படாமல் நின்றுபோதல்.

  சிலருக்கு மாதவிலக்கு தவறாமல் உண்டாகும் ஆனால் மாதந்தோறும் சினை உற்பத்தி நடக்காது. அதாவது அனைத்து சினைப்பைகளிலிருந்து மாதந்தோறும் முட்டை வெளிப்படையாக இருக்கும்.முடி அதிகமாக உதிர்தல் அல்லது முகம், மார்பு, முதுகு, வயிறு போன்ற தேவையற்ற இடங்களில் பெண்களுக்கு முடிவளர்ச்சி காணாமல், சிலருக்கு முடியில்லாமல் வழுக்கை உண்டாகும்.

  உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதால் உடல் எடை மிகவும் அதிகரிக்கும், முகப்பருக்கள் உண்டாதல். கருச்சிதைவு உண்டாதல் – உடலில் இன்சுலின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சினைப்பைகளிலிருந்து சினைமுட்டையானது வெளிப்படாததனால் இந்த நிலை ஏற்படுகிறது.

  கழுத்து, மார்பு, தொடை, அக்குள் பகுதியில் கருமை நிறப்படங்கள் உண்டாதல். தலைவலி, ஒற்றைத்தலைவலி உண்டாதல். உடல் பருமன் காரணமாக இரவில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உண்டாகும்.

  60 சதவீத பெண்கள் பாதிப்பு

  இன்றைய சூழ்நிலையில் பல பெண்களின் முக்கியமான மன அழுத்தத்திற்கு காரணம் சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவு ஆகும். இந்த சினைப்பை நீர்க்கட்டி முக்கியமாக இளம் வயதிலேயே (9-12 வயது) பூப்படையும் பெண்களுக்கு உண்டாகிறது. சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவினால் பெரும்பான்மையான பெண்கள் குழந்தையின் பிரச்சினைகளினால் அவதியுறுகின்றனர்.

  60% பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி உள்ளது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து இயற்கை முறையிலான சித்த மருத்துவம் மூலம் நம் உடலை ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்ளலாம். இதை கண்டறியவில்லையெனில் பின்பு முற்றிய நிலையில் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலின் ஹார்மோன் அதிகரிக்கும் சர்க்கரை நோய் உண்டாகும். மேலும் இதயகோளாறுகள் மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும்.

 

  காரணங்கள்

  இன்றைய சூழ்நிலையில் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளது. வெளி உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதாலும், காரமான உணவுகளை உண்பதாலும் இந்த ஹார்மோன் மாற்றங்கள் உருவாகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.

  செய்யக்கூடாதவை

  அதிக அளவு கார்போஹைட்ரேட் சத்து உள்ள உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். சர்க்கரை சார்ந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பானங்கள் மற்றும் மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரமான உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

  செய்யவேண்டியவை

  பெண்கள் உணவில் பப்பாளிபழம், அன்னாச்சிபழம், மாதுளம்பழம் போன்ற பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

  விட்டமின் டி மற்றும் ஒமேகா – 3 பேட்டி ஆசிட் சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களான கேரட், மணத்தக்காளிக்கீரை, மீன், முட்டை, பால் பயன்படுத்துவதை உணவில் சேர்க்க வேண்டும்.

 தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நார்ச்சத்து உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  தினமும் 60 மில்லி பாகற்காய் சாறு அருந்துவது நல்லது.

தினமும் ஆரோக்கியமாக உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

  உடல் எடையை பெண்கள் இயல்பான எடையில் வைத்திருக்க வேண்டும்.

 மாதம் இருமுறை பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

  பெண்களின் ஆரோக்கியம் வருங்கால சந்ததினருக்கு மிகவும் முக்கியம். மேற்கண்ட எளிய மருத்துவத்தில் 2 குறிப்புகளை தவறாமல் கடைப்பிடித்தாலே சினைப்பை நீர்க்கட்டி, கருப்பைக்கட்டி, குழந்தையின்மை பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வுகளும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment