கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நீண்டகாலமாக வாழ்ந்த 15 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பொன்று சினமன்கார்டன் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளது.
நாய்களை கொல்வதற்காக, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் தலைவரால் ரூ .140,000 மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நாய்களிற்கு விலங்குகள் நல அமைப்புக்களால் கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், நாய்கள் கொல்லப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




