சினிமா

ஆப்கான் மக்களை நினைத்து வேதனைப்படும்: லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமானதில் இருந்து அங்கிருந்து வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் நெஞ்சை பதற வைக்கிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்றால் போதும் என்கிற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். அமெரிக்க விமானப்படை விமானத்தின் டயரை பிடித்துக் கொண்டு தொங்கிய 3 பேர் கீழே விழுந்து பலியான கொடுமை உலக மக்களை பதற வைத்தது.

தொடர்ந்து தாலிபான்களிடம் சிக்கி சிறுமிகளும், பெண்களும் என்ன பாடுபடப் போகிறார்களோ என்பது தான் பலரின் கவலையாக உள்ளது. நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கும் அதே கவலை தான்.

இது குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண் பிள்ளைகளின் நிலை என்னவாகும்? இது பற்றி ஐ.நா. ஏதாவது செய்ய முடியுமா?. எதுவும் தெரியவில்லை ஆனால் கவலை, பயம், மன அழுத்தமாக உள்ளது. கதறி அழ வேண்டும் போன்று உள்ளது #PrayersForAfghanistan என கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்களின் நிலையை நினைத்தால் இதயம் நொறுங்குகிறது என்று பலரும் ட்விட்டரில் குறிப்பிட வருகிறார்கள். இதனால் #AfganistanWomen என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

“தெலுங்கில் நடிப்பது சிரமமாக இருந்தது” – சம்யுக்தா

Pagetamil

கவினின் ‘ஸ்டார்’ முதல் நாளில் ரூ.4 கோடி வசூல்!

Pagetamil

‘ராயன்’ முதல் சிங்கிள் | ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் குரலில் ‘அடங்காத அசுரன்’

Pagetamil

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு

Pagetamil

இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ

Pagetamil

Leave a Comment