கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாக உள்ளார்.
சமீபத்தில் அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அதை தொடர்ந்து அண்மையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன், நடிகர்கள் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபாரூக், உள்ளிட்டோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படக்குழுவினர். தொடர்ந்து பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டது பற்றி பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.
அதில், ‘பீஸ்ட்’ படத்தைப் பொறுத்தவரை, என்னுடைய இயக்குநர் நெல்சன் இந்த பேட்டியை பார்த்து எனக்கு சில ஆக்ஷன் காட்சிகளைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். நான் அதை முயற்சி செய்ய விரும்புகிறேன். படப்பிடிப்பு தளம் மகிழ்ச்சியான இடமாக இருந்ததால் இதுவரை இந்த அனுபவம் மிக சிறப்பாக இருக்கிறது. விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர், அது படப்பிடிப்பு தளத்தில் நானும் உணர்ந்தேன். அவரும் நெல்சனும் படப்பிடிப்பில் ஒரு அற்புதமான சூழலை உருவாக்குவதால் அங்கிருந்து கிளம்ப எனக்கு மனதே இல்லை. என்னுடைய கடைசி படப்பிடிப்பில் கூட, சென்னையில் மழை காரணமாக விரைவாகவே படப்பிடிப்பை முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனக்கு மும்பை திரும்பிச் சென்றது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. என்னை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியது போல இருந்தது.
அன்றைய நாளுக்கான படப்பிடிப்பு முடிந்ததும் நாம் ‘பை’ சொல்ல விரும்பாத, இன்னும் அதிக வேலை செய்ய விரும்பும் படப்பிடிப்புத் தளங்களே சிறந்த படப்பிடிப்பு தளங்கள். ‘பீஸ்ட்’ அப்படியான ஒரு பயணமாக எனக்கு இருந்தது என கூறினார் நடிகை பூஜா ஹெக்டே.