வல்லிபுர ஆழ்வார் மகோற்சவம் மாசி மாதத்திற்கு ஒத்திவைப்பு!

Date:

வடமராட்சி சிறி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

சிறி வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தின் முடிவில் ,இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபயகாரர்களுடன் ஆலய வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தி இருந்தனர்.

அக்கலந்துரையாடலின் முடிவில் , ஆலய மகோற்சவத்தை அடுத்த வருடம் மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்கு ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்