சினோபாரம் தடுப்பூசியை 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்த வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ, லுனாவ மாவட்ட வைத்தியசாலையின் சிற்றூழியரே கைதாகியுள்ளார்.
தடுப்பூசிகளை அவர் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தால் அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் வைத்தியசாலையில் சிலரிற்கு 2,000 ரூபாவிற்கு தடுப்பூசி செலுத்தியது தெரிய வந்துள்ளது.




