குதிக்கால் வலி ஏற்படுகின்றதா அதற்கான காரணம் இதோ.

Date:

தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு ‘பிளான்டார் பேசியைட்டிஸ்’ என்று பெயர். குதிக்கால் எலும்பும் தசைநார்களும் உராய்வதை தடுக்க ‘பர்சா’ எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டால் குதிக்கால் வலி வரும். இன்னும் சிலருக்கு குதிக்கால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல்ஸ்பர்’ என்று பெயர். இதன் காரணமாகவும் குதிக்கால் வலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிக்கால் வலி வரலாம்.

30 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகின்றது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு. நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி ‘வார்ம்அப்’ பயிற்சிகளை செய்யாமல் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்கு குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப்பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப்பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் இதற்கு உதவும்.

இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிக்காலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்த காலணிகள் பாதத்துக்கு சமமான அழுத்தத்தை தருவதில்லை. இவற்றை காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிக்கால் வலியை ஏற்படுத்திவிடும். இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்