இறால்பண்ணையில் வாகரையை சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் மற்றும் பனிச்சங்கேணி ஆகிய பிரதேசங்களில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக நூறு ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் இறால் வளர்ப்பு தொடர்பான அபிவிருத்தி பணிகளை கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டகளப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைகளத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றலில் அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் வாகரை பகுதியில் முன்னெடுக்கப்படும் இறால் வளர்ப்பு திட்டத்துக்கு மட்டகளப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தினை சார்ந்த பயனாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் இராஜாங்க அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இராஜாங்க அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்