வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – சிறுதானிய அப்பம்.

Date:

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

சிறுதானிய அப்பம்

ஒரு கப் கோதுமை மாவுடன் அரை கப் அரிசி மாவு, அரை கப் தேங்காய்த் துருவல், சிறிதளவு முந்திரி, பாதாம், வால்நட் (மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துச் சேருங்கள்) சிறு துண்டுகளாக நறுக்கிய இரண்டு பேரீச்சம்பழம், ஒரு சிட்டிகை ஏலப்பொடி, ஒரு வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். முக்கால் கப் வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டி மாவில் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். இதை எண்ணெய்யில் கரண்டியால் ஊற்றியும் சுட்டெடுக்கலாம் அல்லது குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் அல்லது நெய்விட்டும் சுடலாம்.

 

 

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்