யாழில் அன்டிஜன் சோதனையில் மட்டும் 65 தொற்றாளர்கள்!

Date:

யாழ் மாவட்டத்தில் நேற்று (9) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் 65 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் நேற்று அன்டிஜன் சோதனையில் தொற்றிற்குள்ளாகியது தெரிய வந்தது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 46 பேருக்கு தொற்று உறுதியானது.

இதில் வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேரும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்