யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (9) உயிரிழந்தார்.
சாவகச்சேரியை சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர், கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
நீரிழிவு, சிறுநீரக நோயாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.




