வரும் வாரங்களில் பால்மாவிற்கு பெரும் தட்டுப்பாடு!

Date:

எதிர்வரும் வாரத்தில் உள்ளூர் சந்தையில் பால்மா பொதிகளிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்று இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.

பால்மா நெருக்கடியால் பெரியவர்கள், குழந்தைகள் என பெருமளவானவர்கள் நெருக்கடியை சந்தித்துள்ளதால் அரசிடமிருந்து உடனடி மற்றும் சாதகமான தீர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது  என்றார்.

தீர்மானிக்கப்படாத காரணத்திற்காக, பால்மா இறக்குமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

பால்மா பொதியை சந்தைகளிற்கு கொண்டு வருவதற்கிடையிலான செலவு 1,200 ரூபாவாக இருக்கும் போது, அதை 900 ரூபாவிற்கு விற்க முடியவில்லை என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் கூறுகின்றன.  டொலரின் மதிப்பு ரூ .210 ஐ தாண்டிய நேரத்தில் இது ஒரு நியாயமான கருத்து என்று அவர் கூறினார்.

அரசாங்கம் நாட்டை பாலில் தன்னிறைவு பெறும் என்று கூறியது. எனினும் தற்போதைய நிர்வாகத்தால் அதைச் செய்ய முடியவில்லை. பால் மாவைச் சுற்றியுள்ள பிரச்சினையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

இதற்கிடையில் சந்தையில் எரிவாயு நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த அசேல சம்பத், மஞ்சள் எரிவாயு சிலிண்டருடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்லவுள்ளதாக கூறினார். அத்துடன், நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தை அரசாங்கம் ஏன் வாங்கியது என்று கேள்வி எழுப்பினார்.

நுகர்வோர் வீட்டில் மஞ்சள் எரிவாயு சிலிண்டர்கள் இருந்தால், அவர்களால் நீல எரிவாயு சிலிண்டர்களை வாங்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு தட்டுப்பாட்டிற்கு மத்தியில், எரிவாயு நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் பாராளுமன்றமும் தோல்வியடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

நீல எரிவாயு சிலிண்டர்களை அகற்ற சட்ட தடைகளை நீக்க வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்