25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பருத்தித்துறையில் 2 ஆலயங்களிற்கு சீல்: திருவிழாவிற்கு போனவர் கொரோனாவால் மரணம்!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கோயில்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் கோயில், பருத்தித்துறை சிவன் கோயில் என்பனவே தனிமைப்படுத்தப்பட்டன. அங்கு 14 நாட்களிற்கு வழிபாடுகள் மேற்கொள்ள முடியாது.

முனியப்பர் கோயிலில் நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. பலரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

21ஆம் திகதி வரை கோயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாடுகள் மேற்கொள்ள முடியாது.

இந்த ஆலயத்தில் திருவிழாவில் நேற்று முன்தினம் வரை கலந்து கொண்டிருந்த ஒருவர் (54 வயது) நேற்று திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

பருத்தித்துறை சிவன் கோயிலில் கட்டுப்பாடுகளை மீறி வெளிவீதியில் திருவிழா நடத்தப்பட்டதால், 21ஆம் திகதி வரை அந்த கோயிலும் தனிமைப்படுத்தப்பட்டது.

ஆலய நிர்வாகிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமது ஆலய தனிமைப்படுத்தலை விலக்கிக் கொள்ள அரசியல் தரப்புக்களின் உதவியையும் ஆலயத்துடன் நெருக்கமானவர்கள் நாடியதாக தெரிய வருகிறது. எனினும், அரசியல் தரப்பினர் சுகாதார விதிமுறையை மீறி அழுத்தம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிய வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment