இன்று யாழ் வருகிறார் இராணுவத்தளபதி: விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்குவார்!

Date:

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (7) யாழ்ப்பாணம் வருகிறார்.

அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

1992 ஓகஸ்ட் 8ஆம் திகதி அராலித்துறையில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தை மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர். (தற்போதைய இராணுவத் தளபதியும் கஜபா படையணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

இன்றைய பயணத்தின் போது, யாழ் நகரில் உள்ள விடுதியொன்றில் இடம்பெறும் நிகழ்வில், அண்மையில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்கவுள்ளார். இதற்காக தமிழ் அரசியல் கைதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்