வெற்றிலை சாப்பிட்டு முடித்ததும் பாட்டிமார்கள் போட்டுகொள்ளும் ஒரு பொருள் என்று தான் நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வெற்றிலை கொண்டு பல வைத்தியங்களை பாட்டிமார்கள் செய்ததை பார்த்திருக்கிறோம். இதை சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் கூட பரிந்துரைக்கிறது. வெற்றிலையின் மகத்துவமான நன்மைகள் என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
வெற்றிலை ஆயுர்வேதத்தில்
ஆயுர்வேதத்தின் படி வெற்றிலை இலை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது ஜீரணிக்க மிகவும் இலகுவாகவும் ஆற்றலில் சூடாகவும் கருதப்படுகிறது. வெற்றிலையை வழக்கமாக எடுத்துகொள்வதன் மூலம் மனிதனின் உடலில் வாதம் மர்றும் கப தோஷங்களை சமப்படுத்தும் என்று நம்பபடுகிறது.
இது வாய்வழி சுகாதாரம். நல்ல சுவை, வாய்வழி குழி மற்றும் தொண்டை நோய்களை தடுப்பதற்காக வெற்றிலைகளை மெல்லுவதை தினசரி வழக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிலை ஊட்டச்சத்து மற்றும் விட்டமின்கள், தாதுக்கள், கார்பொஹைட்ரேட், நைட்ரஜன், பொஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் அயோடின் ஆகியவற்றை கொண்டுள்ளது. வெற்றிலை இலையில் தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் ஆகியவை உள்ளன. வெற்றிலை இலைகளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவது வைட்டமின் மற்றும் கனிம ஊட்டச்சத்துக்களுடன் ஒப்பிடத்தக்கது. இது 300 மில்லி பசும்பாலில் ஒத்த வைட்டமின் கொண்டுள்ளது. கால்சியம் நிறைந்த வெற்றிலை இலையின் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
காயம் குணப்படுத்தும் பண்புகளை வெற்றிலை கொண்டுள்ளது. கொதிப்புகள், புண்கள், காயங்கள், மூக்கின் புண்களை குணப்படுத்த வெற்றிலை வெளிப்புறமாக பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை சாற்றை பிழிந்து காயத்தின் மேல் தடவி, அதன் மேல் புதிதாக பறிக்கப்பட்ட வெற்றிலை வைத்து மூடி வைக்கவும். காயம் மிக வேகமாக குணமாகும். கொப்புளங்கள் இருக்கும் போது வெற்றிலையை சூடாக்கி அதன் மேல் விளக்கெண்ணெய் தடவி எண்ணெய் தடவிய இலையை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். ஒவ்வொரு சில மணி நேரத்திலும் இந்த இலையை மாற்றி எடுக்கவும். இது கொப்புளங்களை வெளியேற்ற உதவும். காயங்களை குணப்படுத்த சில வெற்றிலைகளைன் சாறை எடுத்து காயத்தின் மீது தடவி விடவும். அதன் மேல் வெற்றிலை இலையை மடக்கி கட்டவும். 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் காயம் விரைவில் ஆறும்.