பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ரகிம்யார் கான் மாவட்டத்தில் உள்ள போங் நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயில் 50 பேர் கொண்ட இஸ்லாமியர் குழுவால் அடித்து நொருக்கி சூறையாடப்பட்டுள்ளது.
9 வயதான இந்து சிறுவன் ஒருவனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதன் எதிரொலியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிந்து நதி மற்றும் சிந்து-பஞ்சாப் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் போங். பல தங்க வர்த்தகர்கள் அங்கு வாழ்கின்றனர்.
அப்பகுதியில் இந்து மற்றும் முஸ்லீம் குழுக்களுக்கு இடையே சில பழைய பண தகராறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது அமைதியின்மைக்கான உண்மையான பின்னணி காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
சில நாட்களின் முன்னர் உள்ளூரில் இஸ்லாமிய புனித இடமொன்றில் 9 வயதான இந்து சிறுவன் சிறுநீர் கழித்துள்ளான்.
தாருல் உலூம் அரேபியா தலைமுல் குர்ஆனைச் சேர்ந்த மதகுருவான ஹபீஸ் முஹம்மது இப்ராகிமின் புகாரின் பேரில், பாங் காவல்துறையினர் ஜூலை 24 அன்று பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் பிரிவு 295-ஏ இன் கீழ் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் சிறியவர் மற்றும் மனநலம் குன்றியவர் என்று கூறி சில இந்து பெரியவர்கள் வணக்கஸ்தல நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிக மத பெரியவர்களுடன் பேசி, பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டது.
ஆனால், 5 நாட்களுக்கு முன்பு கீழ் நீதிமன்றம் சிறுவனுக்கு பிணை வழங்கியபோது, சிலர் புதன்கிழமை நகரத்தில் பொதுமக்களைத் தூண்டிவிட்டு அங்குள்ள அனைத்து கடைகளையும் மூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன், போங் நகரத்தில் 60 கிமீ தொலைவில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கானவர்கள், கோயிலை அடித்து நொறுக்கியதாகவும், சுக்கூர்-முல்தான் மோட்டார் பாதையை (எம் -5) தடை செய்தனர்.
போராட்டக்காரர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எம் -5 நெடுஞ்சாலையை தடுத்தனர்.
சம்ரோ பழங்குடியினரைச் சேர்ந்தவர்களே சமூக ஊடகங்களில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து, அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர். சர்ச்சையையடுத்து, போங் நகர கடைத்தெரு மூடிய பிறகு, அந்த கும்பல் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்களின் சில வீடுகளையும் தாக்கியுள்ளனர்.
Ganesh Temple, village Bhong in Rahim Yar Khan, Punjab has been ravaged.
Another day, another attack on Hindus in Pakistan. pic.twitter.com/grLlT582XL— Veengas (@VeengasJ) August 4, 2021
மாவட்ட காவல்துறை செய்தித் தொடர்பாளர் அகமது நவாஸ் சீமா, பாதுகாவலர்கள் பிரச்சனையான பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் கூறினார்.
சிறுவன் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளான்.