குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடா? இதோ காரணமும் தீர்வும்.

Date:

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளும் … தீர்வும் …

ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. விளையாட்டிலும் ஆர்வம் குறைகிறது.

ஊட்டச்சத்து குறைபாடுக்கான 8 காரணங்கள்

1. குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்கவில்லை.

2. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தர தவறியது.

3. குழந்தையை சரியாக பராமரிக்காதது.

4. நுண் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை.

5. கருவுற்றபோது தாய் ஊட்டச்சத்தான உணவை உண்ணாமல் இருந்தது.

6. தாய் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டது அல்லது தாய் குறைந்த எடையுடன் இருப்பது.
இதனால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும்.

7. சுகாதாரமற்ற தண்ணீரைப் பருகுதல், சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், தேவையானபோது கைகளை சோப் பயன்படுத்தியோ அல்லது நன்றாக கை கழுவாமலோ இருத்தல்.

8. சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருப்பது. சுகாதாரமற்ற சூழலில் இருப்பது.

ஊட்டச்சத்துக் குறைபாடால் ஏற்படும் பின்விளைவுகள் (ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகள்) குழந்தையின் வளர்ச்சியை முடக்கிவிடும். ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் ஆயுள் முழுமைக்கும் பிரச்சனைதான். எடை குறைவாக, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தொற்றுநோய்களாலும், சீதபேதி, நிமோனியா, அம்மை நோய்களால் அதிகம் உயிரிழக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. விளையாட்டிலும் ஆர்வம் குறைகிறது. எதிலும் அக்கறையற்ற போக்கு மேலோங்குகிறது.

செய்ய வேண்டியது என்னென்ன?

1. உணவில் அதிக கவனம் எடுக்க வேண்டும். 6 மாத குழந்தைக்கு அதிகமாக இருப்பவர்களின் சத்தான உணவுகளைக் கூழ், கஞ்சி வடிவில் கொடுங்கள்.

2. பற்கள் முளைத்து விட்ட குழந்தைகள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

3. உணவு ஊட்டும் முறையை மேம்படுத்துதல், ஆரோக்கியமான வாழ்வுமுறையைப் பின்பற்றுதல், கர்ப்பிணிப் பெண்களைப் பற்றி தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் தீர்வு கிடைக்கும்.

4. தமிழக குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க தாய்ப்பால் தருவது அவசியம்.

5. ஊட்டச்சத்தின் தேவை, கர்ப்பக்கால ரத்தசோகையைத் தவிர்த்தல், குழந்தைகளை நோயிலிருந்து தற்காத்தல், தடுப்பு மருந்துகளைத் தவறாமல் செலுத்துதல், கைகளை சோப்பு போட்டுக் கழுவும் பழக்கத்தை ஊக்குவித்தல் போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு அவசியம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்