அடுத்தவாரம் பிசிஆர், அன்டிஜன் சோதனைகளிற்கு விலைக்கட்டுப்பாடு!

Date:

அடுத்த வாரம் பிசிஆர் மற்றும் ரபிட் அன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனைகள் நடத்தும் 45 மருத்துவமனைகளும், அன்டிஜென் சோதனைகள் நடத்தும் 43 மருத்துவமனைகளும் 21 மாவட்டங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

சோதனைகள் வெவ்வேறு விலை விகிதங்களில் நடத்தப்பட்டது தெரியவந்தது.

அதன்படி, ஒரு பிசிஆர் சோதனைக்கு ரூ .5,000 முதல் ரூ .9,500 வரையும், அன்டிஜென் சோதனை ரூ .2,000 முதல் ரூ .5,900 வரையும் அறவிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

எனவே அடுத்த வாரம் முதல் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அழகியவண்ண கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக,...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்