மட்டக்களப்பில் பயங்கரம்: பெண் கடத்தப்பட்டு கொலை; சாக்கில் அடைத்து சந்தையில் வைக்கப்பட்டது!

Date:

வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் உடல் சாக்கில் அடைக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணே முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று பகல் வங்கியொன்றிற்கு சென்றுவிட்டு, ஹாட்வெயார் ஒன்றிற்கு சென்றார். பகல் 12.30 மணியின் பின்னர் காணாமல் போயிருந்தார்.

நேற்று மாலை இருவர் வாழைச்சேனை சந்தைக்குள் உள்ள கடையொன்றின் முன்பாக சாக்கொன்றை வைத்து விட்டு, பார்த்துக் கொள்ளும்படியும், மீண்டும் வந்து எடுப்பதாகவும் கூறிச் சென்றனர்.

எனினும், நீண்டநேரமாகியும் யாரும் வராததையடுத்து சந்தேகமடைந்த கடை உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

பொலிசார் மேற்கொண்ட சோதனையில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு, சாக்கில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 27 வயதான இளைஞன் உள்ளிட்ட இருவர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்