29.3 C
Jaffna
March 29, 2024
லைவ் ஸ்டைல்

அழகு, ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்தும் பழம் இதோ.

பொதுவாக பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை. அவை நமது உடலுக்கு நன்மை பயக்கின்றன என்பது பலரும் அறிந்த விஷயமே. ஆனால் மற்ற பழங்களை விடவும் நோனி பழமானது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இளமையான தோற்றம் மற்றும் தலை முடி ஆரோக்கியம் போன்ற விஷயங்களுக்கும் இந்த பழம் உதவுகிறது.

​நோனி பழமும் அதன் ஊட்டச்சத்துக்களும்.

பலருக்கு இந்த பழத்தின் பெயர் புதியதாக இருக்கும். இந்த பழம் அதிகமாக பயன்பாட்டில் இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தில் முக்கியமான பழமாக நோனி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஒரு பழமாக நோனி உள்ளது. இந்த பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடல் உயிரணுக்களை மீளுருவாக்கம் செய்ய உதவுவதில்லை என்றாலும் அவற்றிற்கு வைரஸால் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது.

நோனி பழமானது விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி 3 மற்றும் இரும்பு போன்ற ஒக்ஸிஜனேற்றிகளை அதிகமாக கொண்டுள்ளது. இவை அனைத்தும் உடலின் உள் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு சரும அழகிற்கும் உதவுகிறது.

நோனி பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

​இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
ஒரு ஆய்வின்படி நோனி பழத்தில் நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. யாராவது நீரிழிவு நோயை தடுக்க விரும்பினாலோ அல்லது அதன் நோய் அபாயத்தில் இருந்து விலகி இருக்க விரும்பினாலோ அவர்களுக்கு நோனி பழச்சாறு உபயோகமானதாக இருக்கும். மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் நோனி பழச்சாறை பயன்படுத்தலாம். இதை மூன்று வாரங்கள் பயன்படுத்துவதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.

​சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோனி பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், ஆண்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சரும மேம்பாட்டிற்கு உதவுகின்றன. நோனி பழச்சாறு குடிப்பது என்பது உங்கள் இரத்தத்தை நச்சுத்தன்மையற்றதாக மாற்ற உதவுகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. இவை அனைத்தும் நீங்கள் அழகான சருமத்தை பெற உதவுகிறது.

​வலி பிரச்சனையை சரி செய்கிறது.
கீல்வாதம் அனுபவிக்கும் மக்களுக்கு தெரியும் வலி என்பது என்ன என்று. அவர்கள் தினமும் வலியை அனுபவிக்கிறார்கள். மேலும் இந்த நோயால் உடலில் ஏற்படும் குறைபாடுகள் மிகவும் சிக்கலானவை. ஆனால் அன்றாட உணவில் ஒரு பகுதியாக நோனி பழச்சாறை சேர்ப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை நீங்கள் சமாளிக்க முடியும் என்று உணவு குறித்த இதழ் ஒன்று மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

​தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
தலைமுடி ஆரோக்கியம் என்பது இந்திய பெண்களுக்கு முக்கியமான விஷயமாகும். அதிகமான வியர்வை மற்றும் ஈரப்பதமானது உங்கள் உச்சந்தலையில் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. இதனால் முடியின் மயிர்கால்கள் சேதமடைகின்றன.

இதன் காரணமாக நீங்கள் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கலாம். ஆனால் இதற்கு நோனி பழச்சாறு உதவுகிறது. நோனி பழச்சாறானது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டது. எனவே வியர்வையால் தலையில் ஏற்படும் அசெளகரியத்தை இது குறைக்கிறது.

​சோர்வை குறைக்கிறது.
நம்மில் பலர் சில நேரங்களில் நாள் முழுவதும் கூட சோர்வாக உணர்கிறோம். சோர்வுக்கான முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடு ஆகும். இரத்தத்தில் இரும்பு சத்து குறையும்போது அது இரத்த சோகைக்கு வழி வகுக்கும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அதிகமாக இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நோனி பழச்சாறு உதவுகிறது. எனவே உங்களுக்கு ஆற்றல் குறைவாக இருப்பதாகவோ அல்லது சோர்வாக இருப்பதாகவோ உணர்ந்தால் உடனே நோனி பழச்சாறை எடுத்துக்கொள்ளவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment