யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை அது புகழ் பாடிய அந்த பைத்தியத்தை தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் அதேவேளை அனுர அரசாங்கம் 20 வருடம் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் இன்று திங்கட்கிழமை (14) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, கொள்ளை, குடிகாரர்கள், குடிகாரர்கள் தான் இருக்கின்றனர் என உலகத்துக்கே தெரிந்துள்ளது இருந்தபோதும் அரசாங்கத்துக்கு எதிராக அனுராதபுரத்தில் பெரிய ஒரு கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அனைவரும் வீதியில் தவழ்ந்து கொண்டதை முகநூலில் பார்த்திருப்பீர்கள்
அது மட்டுமல்ல மஹிந்த அல்லது நாமல் கூட்டம் கொடுத்து பணத்தை பெற்றுக் கொண்டதற்காக அனுரா கள்ளன் என அடுத்த சொல் நாமல் கள்ளன் கோஷமிட்டனர் உண்மையில் அடி மனதால் நாமல் கொரா என சொல்லப்பட்டது
பணத்தையும் மதுபானத்தையும் வாங்குவதற்கு அனுரா கொரா என சொல்வது கடமை ஏன் என்றால் பணத்தையும் மதுபானத்தையும் பெற்றுக் கொண்டதற்காக ஆனால் அடிமனதில் இருந்து நாமல் கொரா என சொன்னது இது தான் நிலைமை
இலங்கையில் இவ்வளவு பேரும் தான் அனைத்து கட்சிக்கும் ஆதரவாளர்கள் என்பது ஊடகங்கள் மூலம் தெரிகின்றது கடந்த ஊடக சந்திப்புக்களில் தெரிவித்தேன் முடியும் என்றால் இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுங்கள் அப்படி இல்லை என்றால் கட்சியை கலைத்துவிட்டு வீட்டுக்கு சென்று ஓய்வு எடுங்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் 75, 80, 90 வயது இனி உங்களால் முடியாது என இந்த அரசாங்கம் மக்களின் மனதை தொட்ட அரசாங்கம், மக்களால் உருவாக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிராக எதுவும் செய்து வேலை இல்லை .
மக்கள் மனசில் இருந்து அகற்றினால் தான் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் எனவே தயவு செய்து அதை கை விட்டுவிட்டு அரசாங்கத்துக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் 20 வருட காலம் இந்த அரசாங்கம் தான் நிலைத்திருக்கும்
இன்று இலங்கையில் உள்ள மூவின மக்களும் ஜனநாயக காற்றை சுவாசித்துக் கொண்டு சுதந்திரமாக நடந்து கொண்டு சுதந்திரமாக தொழில் செய்து சந்தோஷமாக வாழுகின்ற தோற்றப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது
அதே நேரத்தில் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில்; இருந்து ஒரு பைத்தியம் சென்று அந்;த நயவஞ்சகர்களை புகழ்பாடுது
அந்த பைத்தியம் வாங்கிய பணத்துக்கு ஆடியுள்ளார் எனவே அவர் கடவுளை மன்றாட வேண்டும் எனது கண்ணில் முழித்து விடக் கூடாது என இந்த பைத்தியத்துக்கு கூடிய விரைவில் மருந்து கட்டுவேன் பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும் இது தமிழ் மக்களுக்கு ஒரு விசமி சாபக்கேடு. இவ்வாறான பைத்தியங்கள் கால காலமாக வரும் அதை நாங்கள் தான் இனம் காண வேண்டும் என்றார்.
-கனகராஜா சரவணன்-




