27.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளிற்கு அனுமதியில்லையா- சஜித்: கொரோனா கொண்டு வந்தாரா?- அமைச்சர்!

ஜனநாயக, சட்ட ஆட்சியின் கீழ், கைதான ஆசிரியர்களை சந்திக்க சென்ற எனக்கு பொலிசாரால், துறைமுக அதிகாரசபையினரால் தடையேற்படுத்த முடியுமா என எதிர்க்கட்சி தலைவர்சஜித் பிரேமதாசா நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலமைகளை இன்று (05) பார்வையிடுவதற்காக சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு உள்நுழைவதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா,

இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட்டு, அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்த உரிமையில்லையா என கேள்வியெழுப்பினார்.

துறைமுக அதிகாரசபை, பொலிசாரால் தமக்கு தடையேற்படுத்த முடியுமா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அது தொடர்பில் ஆராய்வதாக சபாநாகர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ரோஹித அபேகுணவர்த்தன, நாட்டின் சுங்கம் போன்ற முக்கிய துறைகள் இயங்கும் துறைமுக பகுதிக்குள் செல்வதற்கு முறையான அனுமதி தேவை. அதிகாரசபையினர் முறையாகவே செயற்பட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் அங்கு செல்வதென எனக்கு தொலைபேசியில் தகவல் தந்திருந்தால், அதற்கான ஏற்பாட்டை நான் செய்திருப்பேன் என்றார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவது எமது உரிமை. கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாம் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டோம். இப்பொழுது இவர்கள் துறைமுகத்திற்கு செல்வது பற்றி பேசுகிறார்கள்.

நாடாளுமன்றத்திற்குள் கொரோனா பற்றி நன்றாக கதைக்கும் எதிர்க்கட்சி தலைவர், நாடு முழுவதும் நடக்கும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் இருக்கிறார். இதன்மூலம் கொரோனா பரப்புகிறார். துறைமுகத்திலும் கொரோனா பரப்ப வந்தாரா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

Leave a Comment