கைதான 44 பேருக்கும் தொற்று இல்லை: இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவர்!

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நேற்று கைது செய்யப்பட்ட 44 சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நேற்றிரவு கைது செய்யப்பட்டவர்களில் 22 ஆண் ஆசிரியர்கள், 16 பெண் ஆசிரியர்கள் மற்றும் வேறு 6 நபர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மூத்த டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார அலுவலகம் நேற்று 44 பேருக்கும் விரைவான ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொண்டது. அவர்களில் யாருக்கும் தொற்று இருக்கவில்லை.

அவர்கள் வந்த பத்து வாகனங்களை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைகளை மீறியது, முக்கிய வீதியில் தடைகள், சட்டவிரோத கூட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மீது தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி ஆசிரியர் மற்றும் தொழிற்சங்கங்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வாகன பேரணி கடவத்த, கொட்டாவ, மொரட்டுவ மற்றும் வெலிசர ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பித்த பேரணி, ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்தது. வாகனப் போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தை சுற்றி நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்