27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
மருத்துவம்

சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருக்க!

சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சமீபகால சிறுநீரக நோய்கள் அதிகமாக வருவது மட்டுமல்லாமல், அதற்கான சிகிச்சைக்குரிய செலவும் உலக அளவில் அதிகமாக வருகிறது. 8 முதல் 10 சதவீத பேருக்கு சிறுநீரகத்தில் ஏதேனும் ஒரு பாதிப்பு உள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அறிகுறி இல்லாமல் இருக்கும் சிறுநீரக நோய் படிப்படியாக சிறுநீரக செயல் திறனை குறைப்பதோடு, முற்றிலும் அதன் செயல்பாட்டை இழந்து விடும் நிலைக்கு வந்து விடுகிறது.

அப்படி ஒரு நிலை ஏற்படும் போது உயிர் வாழ டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சிறுநீரக நோயை கண்டுபிடிப்பதன் மூலம் மோசமான நிலையை அடையாமலும், இதன்மூலம் இதய நோய் வராமலும் தடுக்க முடியும்.அதாவது சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக எடை உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், புகைபிடிப்பவர்கள், குடும்பத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிறுநீரக செயலிழப்பின் வேகத்தை குறைக்கவும், அதன் மூலம் இதய பாதிப்புகளை தடுக்கவும் கீழ்கண்ட சிகிச்சை முறைகள் உதவுகின்றன. அதாவது ஆரோக்கியமாக உடலை பேண வேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறுநீரில் புரதசத்து ஒழுகுதலை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டும். கொழுப்பு சத்தின் அளவை ரத்தத்தில் குறைக்க வேண்டும். சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேற்கண்டவற்றை கவனித்து சிறுநீரக பாதிப்பு வராமல் பார்க்க முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment