மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும் தனுஷ் பட நடிகை!

Date:

தமிழ் திரையுலகின் பிசியான நடிகரான விஜய் சேதுபதி சர்ச்சைக்குரிய தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தியில் உருவாகி வரும் அந்த வெப் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கிறார்.

மேலும் ராஷி கன்னாவும் நடிக்கிறார். ராஷி கன்னா முன்னதாக சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ராஷி கன்னா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த துக்ளக் தர்பார் படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

தொடர்ச்சியான ராஜ் மற்றும் டிகே இயக்கும் தொடர் மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பது குறித்து ராஷி கன்னா ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

எனக்கு பிடித்த மனிதர், நடிகருடன் சேர்ந்து மூன்றாவது முறையாக நடிக்கிறேன். இம்முறை இந்தியில். எங்கள் செட்டுக்கு வரவேற்கிறோம் என கூறினார்.

ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் இந்த வெப் தொடர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கிடையே விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க காத்துக் கொண்டிருப்பதாக ஷாஹித் கபூர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார்.

இந்த தொடருக்கான அவரின் புது லுக் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்