மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் மார்பகங்கள் வலிக்கின்றதா???

Date:

மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் வயிறு, இடுப்பு, தொடைகள் போன்ற வலிப்பதைப் போன்று பல பெண்களுக்கு மார்பகங்களில் வலி இருக்கும். மார்பகங்களில் வீக்கம், கனத்த உணர்வு, வலி ​​போன்ற மாற்றங்களின் பின்னணி, தீர்வுகள் பற்றி இனி பார்க்கலாம்.

மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (ப்ரீமென்ஸ்ட்ரல் சிண்ட்ரோம்) பிரச்னைதான் காரணம். மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.

இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் ஆரம்பித்து, மாதவிலக்கின்போது உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாக
விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

எவை எல்லாம் சாதாரணமானவை?

* வீக்கம்
* மென்மையாதல்
* வலி
* எரிச்சல்

மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்?

* கொழுப்பு அதிக உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.
* கஃபைன் உள்ள காபி, டீ, கோலா, சாக்லெட் என அனைத்தையும் தவிர்க்கவும்.
* மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.
* மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.
* உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?

* மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி ​​போன்ற தென்படல்.
* மார்பகங்களிலிருந்து திரவமோ, ரத்தமோ கசிந்தால்.
* உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பின்பற்றிய பிறக்கும் ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தால். தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தது.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மகளிர் மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.

சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
* வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ்
* பசலைக்கீரை
* ஆலிவ்
* சோளம்
* கேரட்
* வாழைப்பழம்
* பழுப்பரிசி

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...

விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்...

பிரகீத் எக்னொலிகொட வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, அதன் பின்னர் காணாமல் போன சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்