27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
ஆன்மிகம்

மேஷம் ரிஷபம் மிதுனம் ராசிக்கான வார ராசிபலன்..

மேஷம் ரிஷபம் மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் (ஆகஸ்ட் 2 முதல் 8 ம் தேதி வரை)

மேஷம்

(அஸ்வினி -1, 2, 3, 4 பாதங்கள் – பரணி -1, 2, 3, 4 பாதங்கள் – கார்த்திகை -1, பாதம்)

அஸ்வினி நட்சத்திரத்திற்கு

உங்களின் குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதோடு உங்கள் துணை மூலம் ஆதாயமும், உதவியும் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் விரைவில் வெற்றி அடைய கடின உழைப்பு உள்ளது.

பரணி

நட்சத்திரத்திற்கு குடும்பத்தில் நிம்மதியும், பெண்களுக்கு ஆனந்தம் தரும் பலன் கிடைக்கும். புன்னகையுடன் எந்த ஒரு செயலையும் எதிர்கொள்வீர்கள். உங்கள் மனம் போல எண்ணங்கள் வெற்றி அடையும், கடின உழைப்பு வெற்றியைத் தரும்.

கார்த்திகை 1 ஆம் பாதம்

உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும் வாரமாக இருக்கும். எனினும் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைவதோடு, பொருளாதார ரீதியாக நல்ல வரவு ஏற்படுகிறது. தேவையற்ற நேர விரயத்தைத் தவிர்ப்பது அவசியம். மற்றவர்களுக்கு நல்லது செய்து புகழ் பெற்றிடுங்கள்.

ரிஷபம்

(கார்த்திகை-2,3,4 பாதங்கள்-ரோகிணி -1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம் -1,2 பாதங்கள்)

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

இந்த வாரம் வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் உங்கள் திறமையால் லாபத்தை அதிகரிப்பீர்கள். பாராட்டு கிடைக்கும். பெண்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

ரோகிணி நட்சத்திரத்தினர்

நினைத்ததை விட அதிக பண வரவு பெறுவீர்கள். பெரிய வெற்றியை அடைவீர்கள். உங்கள் வியாபாரத்தில் போட்டிகளில் மனக்கசப்பு ஏற்படுகிறது. செயலில் அலைச்சல் அதிகரிக்கும்.

மிருகசிரீஷம் – 1, 2 பாதங்கள்

இந்த வாரம் உங்களின் கெளரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதையும், முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் அமைதி காப்பதும், வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். தொழிலில் எதிர்பார்த்த வெற்றியடையலாம்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை -1,2,3,4 பாதங்கள், புனர்பூசம் -1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3, 4 பாதங்கள்

தேவையற்ற அலைச்சல் உங்கள் உடல் நலனைப் பாதிக்கும். எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய கடினமாக உழைக்க வேண்டும். பயணத்தில் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மதிப்பு மரியாதை உண்டாகும்.

திருவாதிரை

எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது.உறவின், சுற்றத்தார் மூலம் பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும்.

புனர்பூசம் – 1, 2, 3 பாதங்கள்

அரசு முறையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெற்றோர் உடல் நலனின் அக்கறை தேவை. இலாபம் அதிகரிக்கும். கடின உழைப்பு வெற்றியைத் தரும். ஆரோக்கியத்தைப் பேண சரியான நேரத்தில் நல்ல உணவை எடுத்துக் கொள்ளவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment