வீட்டுத்திட்ட மிகுதி கொடுப்பனவை கோரி போராட்டம்!

Date:

வீட்டுத்திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக, சுழிபுரம் மத்தி ஜே/173 கிராம சேவகர் பிரிவு மக்கள் இன்றைய தினம் (02) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,

கடந்த 2018 மற்றும் 2019 காலப்பகுதியில் ஜே/173 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 45 குடும்பங்களுக்கு ரூபா ஐந்து இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி எமக்கு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. ஒரு பகுதி அளவு நிதி மட்டுமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மிகுதி வேலைகளை நாங்கள் கடன்பட்டு தான் செய்துள்ளோம். இருந்தாலும் வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

எமது வீடும் முழுமை பெறாத நிலை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கடன் கொடுத்தவர்களின் தொல்லை என நாங்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றோம்.

இந்த வீட்டுத் திட்டம் எங்களுக்கு வழங்குவதற்கு முதல் நாங்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தோம். ஆனால் இந்த விட்டு திட்டமானது தற்போது எங்களை கடன் சுமையில் தள்ளியுள்ளது.

எனவே உரிய தரப்பினர் எமது விடயத்தை கருத்தில்கொண்டு எமது வீட்டுத் திட்டத்தின் மிகுதி நிதியை சீக்கிரம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்