Pagetamil
லைவ் ஸ்டைல்

இதோ கரப்பான் பூச்சியை குறைக்க எளிய வழிகள்!

சமையல் அறையில் கரப்பான்பூச்சி தொல்லை தாங்க முடியலயா?. இதோ கரப்பான் பூச்சியை குறைக்க எளிய வழிகள்!

கரப்பான் பூச்சிகள் என்றாலே மிகவும் அருவருப்பானவை, அதை யாருமே தங்களுடைய வீட்டில் இருப்பதை விரும்புவதில்லை. எறும்பு, கொசு போன்றவற்றைக்கூட சகித்துக் கொண்டுவிட முடியும். ஆனால் கரப்பான்பூச்சி மற்றும் எலி கிச்சனுக்குள்ளும் வீட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டால் வீட்டையே ஒரு வழி ஆக்கிவிடும்.

கரப்பான்பூச்சி மற்றும் எலித் தொல்லை அதிகமாகிவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடும். கரப்பான்பூச்சிகள் மிக ஆபத்தான பாக்டீரியாக்களை வீட்டுக்குள் கொண்டு வருகின்றன. அவை உங்கள் உணவையும் மாசுபடுத்தும். அதைவிட அவற்றைப் பெருக விட்டுவிட்டால் ஒழிப்பதோ கொள்வதோ மிக்க கடினம். கடைகளில் கரப்பான் பூச்சிகளை விரட்டும் ஸ்பிரேக்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் வாசனைகளும் கூட இந்த நவீன கரப்பான்பூச்சிகளுக்குப் பழகிவிட்டன. அந்த வாசனை வந்தாலே ஓடி ஒழிந்து கொள்கின்றன. அதனால் சில வீட்டு பராமரிப்பு முறைகளின் முலம் அவற்றை விரட்ட முயற்சி செய்யலாம்.

பலர் தங்கள் வீடுகளில் கரப்பான் பூச்சிகளுடன் தினம்தினம் போராடுகிறார்கள். கரப்பான்பூச்சிகள் சூடான, ஈரப்பதமான இடங்களையே அதிகம் விரும்புகின்றன. அதனால்தான் அவை கிச்சனை தேர்ந்தெடுக்கின்றன. அங்கு அவைகளுக்குப் போதுமான அளவு உணவு கிடைக்கும் என்பதால் கிச்சனை தங்களுடைய சொந்த இடமாக மாற்றிக் கொள்கின்றன.

கரப்பான் பூச்சி இருந்தால், அதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கரப்பான் பூச்சிகள் பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்யும். நிறைய மறைமுக நோய்த் தொற்றுக்கள் மற்றும் சருமப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால் கரப்பான்பூச்சி இருப்பது தெரிந்தால் அதை வெளியேற்றுவதை உங்களுடைய முதல் வேலையாக வைத்துக் கொள்ளுங்கள்.

​உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்:

கரப்பான்பூச்சி மற்றும் மூட்டைப்பூச்சி போன்றவை வீட்டை புரட்டிப் போடாமல் இருக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது தான். குறிப்பாக உணவுப் பொருள்கள், கெட்டுப் போன உணவுகள், கிச்சன் சிங், ஈரப்பதம் நிறைந்த இடங்கள் தான் அவைகளுக்குப் பிடிக்கும். அதனால் குளியலறை, கிச்சன், உணவுப் பொருள்கள் வைத்திருக்கும் இடங்கள் ஈரப்பதமின்றி உலர்வாக வைத்திருப்பது மிக அவசியம். கெட்டுப் போன உணவுகள் ஏதேனும் இருந்தால் உடனே அப்புறப்படுத்துவது நல்லது.

​ஹேர் ப்ரே பயன்படுத்துங்கள்:

வீட்டில் இருக்கும் கரப்பான்பூச்சி தொல்லைக்கு இது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். கரப்பான்பூச்சி சுற்றித் திரந்து கொண்டிருக்கும்போது அதன் மீது இந்த ஹேர் ஸ்பிரேவை அடித்தால் அதனால் அந்த இடத்தைவிட்டு நகரவோ, கை மற்றும் கால்களை அசைக்கவோ முடியாது. மீண்டும் ஒருமுறை அடித்தால் போதும் மூச்சுத் திணறி இறந்து போய்விடும்.

 

​பிரிஞ்சி இலைகள்

பிரிஞ்சி இலைகளின் வாசனைகள் கரப்பான்பூச்சிகளுக்குப் பிடிக்காது. துர்நாற்றம் பரவுகிற இடங்களில் தான் கரப்பான்பூச்சிகள் குடியிருக்கும். நல்ல வாசனை இருக்குமிடத்தில் கரப்பான்பூச்சிகள் வருவதில்லை. அதனால் சில பிரிஞ்சி இலைகளை எடுத்து மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். அந்த பொடியை கரப்பான்பூச்சிகள் சுற்றித் திரியும் இடங்களில் தூவி விடுங்கள். அந்த வாசனைக்கு கரப்பான்பூச்சிகள் ஓடிவிடும். கிச்சனில் சிறிது சோப்பு கரைசலில் இந்த பொடியை கலந்து ஸ்பிரே செய்துவிடுங்கள். அப்போதும் கரப்பான்பூச்சி வருவது குறையும்.

​அம்மோனியா கொண்டு சுத்தம் செய்யுங்கள்:

அமோனியாவின் வாசனை சற்று தாங்க முடியாததாக இருக்கும். ஆனால் கரப்பான்பூச்சி தொல்லையைத் தாங்குவதை விட மோசமானதாக இருக்காது. வாசனையைப் பொருட்படுத்தாவிட்டால், அம்மோனியாவைக் கொண்டு வீட்டை சுத்தம் செய்யுங்கள். ஓரளவுக்கு கரப்பான்பூச்சியைக் கட்டுப்படுத்திவிட முடியும். அதற்கு இரண்டு கப் அம்மோனியாவை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து வீட்டையும் கிச்சனையும் சுத்தம் செய்யுங்கள்.

​ஒட்டும் பொறிகளை பயன்படுத்தலாம்

எலிகளைப் பிடிப்பதற்கு கடைகளில் பசை போல் மருந்து தடவப்பட்ட அட்டைகள் வைக்கப்பட்டிருக்கும். வீட்டில் கரப்பான்பூச்சிகள் அதிகமாக சுற்றித் திரியும் இடங்களில் வைத்து விடுங்கள். வீட்டில் போடப்பட்டிருக்கும் தரைவிரிப்புகள், மேட்களுக்கு அடியில் இந்த அட்டைகளை வைத்து விடுங்கள். காலையில் அட்டையில் வீட்டில் சுற்றித் திரிந்த கரப்பான்பூச்சி அத்தனையும் அந்த அட்டையில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment